மன்னாரில் தொழில் முனைவோருக்கு பெறுமதி வாய்ந்த சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் இயங்கி வருகின்ற இரண்டு சுயதொழில்
குழுக்களுக்கான சுய தொழிலை மேம்படுத்துவதற்காக பெறுமதி வாய்ந்த தொழில் சார்
உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த தொழில் சார் உபகரணங்கள் இலங்கை இழப்பீட்டிற்கான அலுவலகத்தினால் இன்றைய தினம்(22.12.2023) மன்னார் பிரதேசச் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கம்
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்ப அங்கத்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் குழுக்களாக செயல்பட்டுக் கொண்டிருந்த பட்டித்தோட்டம் கிராமத்தில் உள்ள குழு ஒன்றுக்கு அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சுய தொழில் உபகரணங்கள் மாவட்ட இழப்பீடுகளுக்கான அலுவலகர் எம்.சுதாகர் ஊடாக பனையோலை கைப்பணிகளை வாழ்வாதாரமாக முன்னெடுக்கும் குழு அங்கத்தவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மன்னார் பெரிய கமம் கிராமத்தில் தும்புத்தடி மற்றும் விளக்குமாறு உள்ளிட்ட கைவினை பொருட்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் குறைந்த வருமானம் பெறும் குழுக்களுக்கு அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக சுமார் 3 இலட்சத்து 54 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தும்புத்தடி சீவுகின்ற இயந்திரமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுத்த இந்திய வீரர்: மோடியை குறிப்பிட்டு செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய டுவீட்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


