இலங்கைக்கு பெருமை சேர்த்த தமிழ் பெண் விமானிகள்
மன்னார் மாவட்டத்தின் முதல் பெண் விமானியாக முதல் கட்ட பயிற்சிகளை நிறைவு செய்துள்ளார் இமானுவேல் எவாஞ்சலின்.
மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வட்டக்கண்டல், காத்தான்குளம் கிராமத்தில், 1999ஆம் ஆண்டு பிறந்த இவர் பாடசாலைக் கல்வியை மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் உயர்தரம் வரை நிறைவு செய்துள்ளார்.
சிறுவயது முதல் விமானியாக வரவேண்டும் என்ற இலக்கினை அடைவதற்காக சென்ற வருடம் (2020) ஜனவரி மாதம் கொழும்பில் உள்ள ஆசிய விமான நிலையத்தில் இணைந்து (Asian Aviation center Colombo Airport) முதல் கட்ட பயிற்சியினை (PPL Stage) நிறைவு செய்துள்ளார்.
இன்னும் இரண்டு வருடங்களில் அனைத்து பயிற்சிகளையும் நிறைவு செய்து முழு விமானியாக வெளிவர உள்ளதாக மன்னார் மாவட்டத்தின் முதலாவது பெண் விமானி என்று பெயர் எடுத்து மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் செயல்பட்டு வரும் இமானுவேல் எவாஞ்சலின் தெரிவித்துள்ளார்.
அதன்படி இலங்கையில் இரு தமிழ் பெண்கள் விமானியாக பயிற்சி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 2011ஆம் ஆண்டு தொடக்கம் விமானியாக பறந்து கொண்டு இருக்கும், முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் மகளும், மன்னாரில் இருந்து பயிற்சி பெற்று கொண்டு 2 வருடத்தில் பயிற்சியை முடிக்கவுள்ள இம்மானுவேல் ஏவஞ்சலினாவுக்கும் அனைவரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri