சிறப்பாக இடம்பெற்ற மன்னார் பிரதேச கலாசார விழா
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், மன்னார் பிரதேச செயலகமும்,கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த மன்னார் பிரதேச கலாசார விழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
மன்னார் நகர சபை மண்டபத்தில் குறித்த நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது.
மன்னார் பிரதேச சபையின் செயலாளர் மனோகரன் பிரதீப் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
கலாச்சார நிகழ்வுகள்
இதன் போது சர்வமத தலைவர்கள் கலந்து கொண்டதோடு, பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் விருந்தினர்களாக மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) ய.பரந்தாமன்,மேலதிக மாவட்ட செயலாளர் (காணி)மா.சிறிஸ்கந்த குமார்,வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதி பணிப்பாளர் லாஹினி நிருபராஜ், மன்னார் கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் அ.மரின் குமார்,கலாபூசனம் ஜோண் பொஸ்கோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன் போது மாவட்டச் செயலகத்திற்கு முன் விருந்தினர்கள் கலாச்சார பேரணி ஊடாக மன்னார் நகர சபை மண்டபம் வரை மங்கள வாத்திய இசையுடன் அழைத்து வந்தனர்.
பின் நகரசபை மண்டபத்தில் கலாச்சார நிகழ்வுகள் இடம் பெற்றதோடு,பரிசளிப்பு நிகழ்வு,மற்றும் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |