மன்னார் - மீனாட்சி அம்மனின் வருடாந்த அலங்கார உற்சவம்
மன்னார் (Mannar) - ஈச்சளவக்கை ஶ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் நான்காம் நாள் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.
கடந்த 12 ஆம் திகதி வாஸ்து சாந்தி பூஜை ஆரம்பிக்கப்பட்டு 13 ஆம் திகதி முதல் நாள் பூஜை வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று (16.05.2024) நான்காம் நாள் திருவிழா இடம்பெற்றுள்ளது.
அலங்கார உற்சவம்
தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் அலங்கார உற்சவ நிகழ்வின் ஈச்சளவக்கை கிராம பக்த பெரு மக்களின் பங்கு பற்றுதலுடன் உற்சவத்தின் பூஜைகள் ஆலய பிரதம குரு சதான சன்மார்க்கப் பீடாதிபதி ஸ்தோத்திர கானவாரிதி சிவாச்சரியார் இளஞ்சுடர் சிவஶ்ரீ மா. க. சிவதர்ஷன சிவாச்சரியார் மற்றும் உதவி குருவான பிரம்மஶ்ரீ கினுசன் சர்மா ஆகியோரினால் நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஆலய பரிபாலன சபையின் ஒழுங்கு படுத்லோடு சிறப்புற நடைபெற்று வரும் உற்சவம் எதிர்வரும் 24 ஆம் திகதி மாலை ஐந்து மணியளவில் வைரவ பூஜை வழிபாடுகளோடு நிறைவு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.