மன்னாரில் கோவிட் பரவல் காரணமாக மன்னார் மீன் சந்தை தற்காலிகமாக பூட்டு
மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்று பரவல் காரணமாக மன்னார் சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (9) பல்வேறு பகுதிகளில் பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொண்டு வருவதுடன், கோவிட்-19 பரவல் உள்ள இடங்களில் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே நேரம் அண்மையில் புகையிரதத்தில் மோதுண்டு மரணித்த மீன் சந்தையில் பணிபுரியும் நபருக்கு கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மன்னார் நககரில் அமைந்துள்ள மீன் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த மீன் சந்தையில் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் அனைத்து வியாபாரிகளுக்கும் பி.சீ.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் சாந்திபுரம், எமில் நகர் பகுதிகளில் அண்மையில் மரண சடங்கில் கலந்துகொண்ட சிலருக்கும் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் அரசஊழியர்கள், வங்கி அதிகாரிகள் உட்பட சுமார் 100 பேருக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(9) காலை பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.












கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri