மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு - அவசர கோரிக்கை
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், குருதி வழங்க முன் வருபவர்கள் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்த வங்கியுடன் தொடர்பு கொள்ளுமாறு அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் செந்தூர் பதிராஜா இந்த அவசர கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் தற்போது குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே குருதி வழங்க விரும்புபவர்கள் உடனடியாக மன்னார் மாவட்ட பொது
வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் அல்லது 023-2222261 மற்றும்
023-2222349 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி குருதி வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.