வைத்தியர் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பித்த மன்னார் நீதிமன்றம்
மன்னார் (Mannar) நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது நேற்றைய தினம் (30) முன்னிலையாகாத சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை (Dr.Archuna) கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நீதவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையினுள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் நிர்வாக செயல்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தியமை தொடர்பாக வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின், இரண்டு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டார்.
வழக்கு விசாரணை
இந்நிலையில் வைத்தியர் அர்ச்சுனாவின் வழக்கு விசாரணைகள் நேற்று (30) மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நிலையில் அவர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.

மேலும், இரண்டு பிணைதாரர்களில் ஒருவர் மாத்திரமே மன்றில் முன்னிலையாகி இருந்துள்ளார்.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான், வைத்தியர் அர்ச்சுனா மற்றும் பிணையாளி ஆகிய இருவரையும் கைது செய்து மன்றில் முன்னிலையாக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri