காணாமல் போன புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கண்டுபிடிப்பு
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கர் அருண் (வயது-24) என்ற இளைஞர் கடந்த 30ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், குறித்த இளைஞர் நேற்று செவ்வாய்க்கிழமை (7) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் கடந்த 30 ஆம் திகதி தனது வீட்டில் இருந்து அடம்பன் பகுதிக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற நிலையிலே வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டது.
மகன் வீடு திரும்பாத நிலையில் அவரது தந்தை அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த இளைஞர் தொடர்பில் பல பகுதியில் தேடுதல் மேற்கொண்ட நிலையில், குறித்த இளைஞன் நேற்று செவ்வாய்க்கிழமை (7) காலை அயல் கிராமத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.






தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
