தேசபந்து தென்னகோனை கைது செய்ய தேடுதல் வேட்டை
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையை குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.
தேசபந்து தென்னகோன் அடிக்கடி சென்று வரும் நான்கு வீடுகள் நேற்றையதினத்தில்(28.02.2025) சோதனையிடப்பட்டிருந்தன.
கொழும்பில் உள்ள வீடொன்றும் அவற்றில் உள்ளடங்கியிருந்தது. மாத்தறை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவைக் கொண்டு இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
விசேட சோதனை நடவடிக்கைகள்
எனினும், சோதனைக்குள்ளாக்கப்பட்டிருந்த எந்தவொரு வீட்டிலும் அவர் இருக்கவில்லை.
இதற்கிடையே, இன்றையதினமும் தேசபந்து தென்னகோனை தேடிக் கைது செய்வதற்கான விசேட சோதனை நடவடிக்கைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ.23 லட்சம் சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு.., UPSC தேர்வில் வெற்றி பெற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி News Lankasri
