மட்டக்களப்பில் அரச காணியை கையகப்படுத்த சூழ்ச்சி! நால்வர் கைது
மட்டக்களப்பு - சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள அரச காணியினை அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்த நால்வர் கொண்ட குழு ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்றைய தினம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து பொலிஸார் மூலம் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பலர் தப்பி ஓடிய நிலையில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அனைவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.