இலங்கையில் நிலவும் கடும் குளிர் காலநிலை! இரண்டு குழந்தைகள் பரிதாபமாக பலி
நாட்டில் நிலவும் கடும் குளிர் காலநிலை காரணமாக கந்தளாய் பிரதேசத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
கந்தளாய் ராஜா அல பிரதேசத்தை சேர்ந்த இரண்டரை மாத குழந்தையும், கந்தளாய் பேராறு பகுதியை சேர்ந்த மூன்று வயது குழந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரண்டு குழந்தைகளும் நேற்றுஅதிகாலை உயிரிழந்துள்ளதுடன், அதில் ஒரு குழந்தை நுரையீரல் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடும் குளிர் காலநிலை
சம்பவத்தில் உயிரிழந்த 02 மாதக் குழந்தை, நுரையீரல் தொடர்பான நோயினால் முன்னர் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
நாட்டில் நிலவும் கடும் குளிர் காலநிலை காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு மூன்று வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.