மண்டோஸ் சூறாவளி! யாழில் கடற்றொழிலாளர்களின் படகுகள் சேதம் (Video)
சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் குருநகர் பகுதி
கடற்றொழிலாளர்களின் 30க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளதாக கடற்றொழிலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மண்டோஸ் சூறாவளியின் தாக்கம் காரணமாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்றொழிலாளர்களின் படகு இவ்வாறு அலையினால் அடித்து சேதமடைந்துள்ளது.
கடற்றொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிப்பு
அத்துடன் ஒரு படகு முற்றாக கடலில் மூழ்கியுள்ளது. இதனால் கடற்றொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
முப்பதுக்கு மேற்பட்ட கடற்றொழிலாளர்களின் படகுகள் இவ்வாறு சேதமடைந்துள்ளதுடன் அவர்கள் கடற்றொழிலுக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன் சேமடைந்த படகுகளை திருத்துவதற்கான பொருளாதார ரீதியாக தம்மிடம் வசதி இல்லை என கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே அரசாங்கம் தங்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டுமென கடற்றொழிலாளர்கள் வேண்டுகோள்
விடுகின்றனர்.



பதினாறாவது மே பதினெட்டு 6 மணி நேரம் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
