கரையை கடந்துள்ள மாண்டஸ் புயல்! தொடர்ந்தும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தமிழகத்தின் வடக்கு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு காற்று அதிகமாக வீசும் என தமிழக வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று இரவு முதல் மெல்ல மெல்ல கரையைக் கடக்கத் தொடங்கியது.
மாண்டஸ் புயலால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பல பாதிப்புக்கள் பதிவாகியிருந்தன.
இந்த நிலையிலேயே இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் வானிலை ஆய்வாளர் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அடுத்த 2 நாட்களுக்கு காற்று அதிகமாக வீசும்
அவர் மேலும் தெரிவிக்கையில், புயல் கரையை கடந்த பகுதிகளில் தான் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். வடமேற்கு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு காற்று அதிகமாக வீசும்.
எதிர் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வலுவிழுந்த மரங்கள் காற்றின் வேகம் காரணமாக முறிந்து விழும் சாத்தியம் காணப்படுவதால் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை பாதிக்கபட்ட குடும்பங்கள் 142, பாதிக்கப் பட்ட அங்கத்தினர்கள் 534 முழுமையாக சேதம் அடைந்த வீடுகள் 2, பகுதி சேதம் அடைந்த வீடுகள் 98, பாதிக்கப் பட்ட சிறு முயற்சியாளர்கள் 8, உட்கட்டுமானங்கள் பாதிப்பு 2, இறந்த மாடுகள் 49, மற்றும் ஆடுகள் 58 இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதிப்புக்கள் தொடர்பில் யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
செய்தி-தீபன்