கிழக்கு மாகாணத்தில் கட்டாயமாக்கப்படவுள்ள தடுப்பூசி அட்டை
எதிர்காலத்தில் கோவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படவுள்ளதால் கிழக்கு மாகாணத்தில் அனைவரும் தடுப்பூசி பெற்றுகொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் இன்று தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகள்,வியாபார நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படவுள்ளது. இதுவரை முதலாம், இரண்டாம் தடுப்பூசி பெறாதவர்கள் தத்தமது சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு தங்களுக்கான தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் கோவிட்-19 பைசர் தடுப்பூசி 16 தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்ட 93 வீதமானவர்களுக்கு ஏற்றப்பட்டுள்ளது. 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு 93 வீதமானவர்களுக்கு முதலாவது தடுப்பூசியும், 82 வீதமானவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தினை கடந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரணங்களும் சம்பவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் தற்போது கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை சிறிதளவு குறைந்து காணப்பட்ட போதிலும், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னிலை அரச உத்தியோகத்தர்களுக்கான மூன்றாவது பூஸ்டர் தடுப்பு மருந்து ஏற்றப்பட்டு வருகின்றது. பொது மக்கள் அவசியமற்ற ஒன்று கூடல்களை தவிர்த்துக் கொள்ளுமாறும், திருமண வைபவங்கள் மற்றும் மரணச் சடங்குகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது புதிய வகையான கோவிட் வைரஸின் தாக்கம் அதிகரிக்கும் சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. இது பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.
எனவே, பொது மக்கள் தொடர்ந்தும் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை
கடைப்பிடிக்குமாறும், இதனை மீறுபவர்களுக்கெதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின்
கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
