பொன்னாலை வரதராஜர் ஆலய மகோற்சவத்தில் கலந்துகொண்டபலர் கட்டாயத் தனிமைப்படுத்தல்!

ponnalai varadarajar temple grand festival!
By Independent Writer Dec 29, 2020 10:21 AM GMT
Report

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற மார்கழி வைகுண்ட ஏகாதசி மகோற்சவத்தின்போது சமூக இடைவெளி பேணப்படவில்லை என்ற காரணத்தால் ஆலய திருவிழாவில் பங்குபற்றிய பலர் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

எனினும், ஆலயத்தில் பூஜைகள் நடைபெறுவதற்குத் தடை விதிக்கப்படவில்லை. பக்தர்கள் ஆலயத்தினுள் செல்லாமல் வெளியே, ஆலய வளாகத்தில் நின்று இறை வழிபாட்டில் ஈடுபட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தில் மகோற்சவ கிரியைகளை நடத்திய அர்ச்சகர்களும் ஆலய பரிபாலன சபையைச் சேர்ந்தவர்களும் ஆலயத்திலும் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், தேர், தீர்த்த உற்சவ உபயகாரர்கள், மகோற்சவ ஆரம்பம் தொடக்கம் முடிவடையும் வரை தொடர்ந்து ஆலயத்துக்கு வருகை தந்தவர்கள், தீர்த்தோற்சவத்தின்போது கடலில் மிக நெருக்கமாக நின்றவர்கள் ஆகியோரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனின் அறிவுறுத்தலுக்கு அமைய சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பொ.யசிதரனின் வழிப்படுத்தலில் பொன்னாலை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ச.சர்மிலன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

கொரோனாத் தடுப்பு செயலணியால், ஆலயத் திருவிழாக்களின்போது 50 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.

இதற்கமைய பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்துக்கு வருகைதந்த பக்தர்களின் பெயர்கள் நுழைவாயிலில் வைத்து பதிவுசெய்யப்பட்டு 50 பேர் மட்டும் ஆலயத்தினுள் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

பக்தர்களுக்கு தொற்று நீக்கல் திரவம் வழங்கப்பட்டது. முகக்கவசம் இல்லாதவர்களுக்கு ஆலய பரிபாலன சபை அவற்றை வழங்கியிருந்தது.

ஆலய வளாகத்திலும் முகப்பிலும் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பனர்கள் கட்டப்பட்டு துண்டுப்பிரசுரங்களும் ஒட்டப்பட்டிருந்தன.

எனினும், திருவடிநிலை புனித தீர்தக்கரையில் நடைபெற்ற தீர்த்தோற்சவத்தின்போது ஆலயத்திற்கு வருகை தராமலேயே வேறு மார்க்கங்களால் பக்தர்கள் அங்கு சென்றிருந்தனர்.

ஏற்கனவே கடலுக்குச் சென்று நீராடிக்கொண்டிருந்த பலர் சுவாமி தீர்த்தமாடச் சென்றபோது திடீரென சுவாமிக்கு அண்மையில் சென்று சுற்றிவர நின்று வழிபட்டனர். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.

இதனால், ஆலய மகோற்சவத்தின்போது சமூக இடைவெளி பேணப்படவில்லை மற்றும் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை எனக் கொரோனா தடுப்பு செயலணிக்கு சமூக ஆர்வலர்கள் சிலர் முறைப்பாடு செய்திருந்தனர் எனத் தெரியவருகின்றது.

இதைத் தொடர்ந்தே தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதுடன் அவர்களின் நடவடிக்கைகளுக்கு தாம் பூரண ஒத்துழைப்பை வழங்குவார்கள் என ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US