கோவிட் அட்டையை கட்டாயமாக்குவது சிறந்த பலனை தரும் : சுகாதார அமைச்சர்
பொது இடங்களுக்கு செல்லும் போது கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான அட்டையை கட்டாயப்படுத்துவது மிகவும் பலனளிக்கக் கூடிய நடவடிக்கை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெகின்னன் நேற்று சுகாதார அமைச்சரை அமைச்சில் சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் பொது இடங்களில் பிரேவசிக்கும் போது கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை உறுதிப்படுத்தும் அட்டையை கட்டாயமாக்குவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த வேலைத்திட்டம் தற்போது ஐரோப்பிய நாடுகளில் நடைமுறையில் உள்ளதுடன் அது மிகவும் பலனளிக்கக் கூடிய நடவடிக்கை எனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இங்கு கருத்து வெளியிட்டுள்ள கனேடிய உயர்ஸ்தானிகர், கனடாவில் பொது இடங்களுக்கு செல்லும் போது கோவிட் தடுப்பூசி அட்டை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதேவேளை இலங்கை பூஸ்டர் தடுப்பூசிகளை நாட்டு மக்களுக்கு வழங்க ஆரம்பித்துள்ளமை மிகவும் சிறந்த நடவடிக்கை எனவும் கனேடியே உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்துள்ளார்.