யாழில் மின் திருத்த வேலையில் ஈடுபட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) மின் திருத்த வேலையில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று (25) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் வண்ணார்பண்ணை - பத்திரகாளி கோவில் பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் நிருஜன் (வயது 42) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் - பூநாரிமடம் பகுதியில் கடை வேலை ஒன்று நடைபெற்ற போது அங்கு முதலாவது மாடியில் குறித்த நபர் மின்திருத்த வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை தவறுதலாக கீழே விழுந்துள்ளார்.
இதன்போது, குறித்த நபரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

5 நாள் முடிவில் வெற்றிப்பெற்றுள்ள டிராகன் திரைப்படம் செய்த வசூல்... தமிழகத்தில் மட்டுமே இவ்வளவா? Cineulagam
