யாழில் உறவினருடன் கடற்றொழிலுக்கு சென்ற நபர் திடீரென உயிரிழப்பு
யாழில் உறவினருடன் கடலுக்குச் சென்ற நபர் ஒருவர் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
விநாயகர் வீதி, மயிலிட்டி பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தார்.
இவர் நேற்றிரவு தனது உறவினருடன் கடற்றொழிலுக்காக சென்றிருந்தார். இந்நிலையில் அவருக்கு இன்று அதிகாலை ஒரு மணியளவில் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் படகிலேயே மயக்கமடைந்தார்.
உடல்கூற்று பரிசோதனைகள்
மயக்கமடைந்த அவருடன் சகலன் அதிகாலை 2 மணியளவில் கரை சேர்த்தார். பின்னர் வைத்தியசாலைக்கு அவரைக் கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடல்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam
