லண்டனில் கத்தியுடன் அச்சுறுத்திய நபர்! - ஆயுதம் ஏந்திய பொலிஸார் குவிப்பு
லண்டன் - ஒக்ஸ்போர்டு வீதியில் உள்ள கடை தொகுதியில் நபர் ஒருவர் கத்தியுடன் இருப்பதாக வந்த முறைப்பாட்டை அடுத்து ஆயுதமேந்திய பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய லண்டனில் உள்ள பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து கடைக்காரர்கள் வெளியேற்றப்பட்டதுடன், கடைக்காரர்கள் அச்சமடைந்திருந்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. தற்போது கடைகள் மீண்டும் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து கடையில் இருந்த ஒருவர் கருத்து வெளியிடுகையில்,
“அப்போது ஒரு மனிதர் "இன்று உங்கள் வாழ்க்கையை இழக்காதீர்கள்" என்று கத்த ஆரம்பித்தார். இதன்போது என் இதயம் முற்றிலும் பலவீனம் அடைந்தது, நான் ஓட ஆரம்பித்தேன், என் அம்மா பின்னால் இருந்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.
பின்னர், சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்தனர். அங்கிருந்த மற்றொரு நபர், கடையின் முன் நடந்ததாகக் கூறப்படும் சண்டைக்குப் பிறகு ஆயுதம் ஏந்திய பொலிஸார் எல்லா இடத்திலும்' இருப்பதாகக் கூறினார்.
இந்த சம்பவத்தை பொலிஸார் உறுதிப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.