சிட்னி படுகொலைகள் : தாக்குதல்தாரியை தடுத்த நபருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கிய சலுகை
அண்மையில் அவுஸ்திரேலியாவின் வணிக நிலையமொன்றில் நடந்த தாக்குதலில், தாக்குதல்தாரியை தடுத்த நபருக்கு நிரந்தர குடியுறிமை விசா வழங்கப்படும் என அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Damien Guerot என்பவருக்கே நிரந்தர குடியுறிமை விசா வழங்கப்படவுள்ளது.
குறித்த நபருக்கு ஒரு மாத காலத்தில் விசா காலாவதியாக இருந்த நிலையில் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.
6 பேர் உயிரிழப்பு
சிட்னியில் உள்ள வணிக வாளாகத்தில் Joel Cauchi என்ற நபர் கூரிய ஆயுதத்தால் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் சந்தேகநபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதையடுத்து அவர் உயிரிழந்தார்.
இந்த தாக்குதலை நடத்திய தாக்குதல்தாரி 40 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |