பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு
யாழில், மனவிரக்தியடைந்த பிரான்ஸில் இருந்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு நேற்று (28.09.2024) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் நீண்ட காலத்திற்கு பின்னர் பிரான்ஸில் இருந்து ஊருக்கு வந்துள்ளார். இவரது 3 பிள்ளைகள் மூன்று வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.
மரண விசாரணைகள்
மன விரக்தியில் இருந்த இவர், தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம்
உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
