குழந்தை உட்பட மூவரை கொடூரமாக தாக்கிய நபர் : இளம் மனைவி பலி
ஹிங்குரக்கொட பகுதியில் பெண் ஒருவர் நேற்று மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
யுதகனாவ பிரதேசத்தில் 27 வயதுடைய பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் மெதிரிகிரிய பிரதேசத்தில் மறைந்திருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளம் தாய் பலி
கொலை செய்யப்பட்ட பெண் இரண்டு பிள்ளைகளின் தாய் என்பதுடன் அவரது ஒன்றரை மாத குழந்தையும் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளது.
குழந்தை தற்போது மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறது. உயிரிழந்த பெண்ணின் தந்தையும் பெண்ணை தாக்கிய அதே மண்வெட்டியால் தாக்கப்பட்டமையினால் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் மேலதிக சிகிச்சைக்காக பொலநறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குடும்ப தகராறு
பணம் காணாமல் போனமை தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கொலை தொடர்பில் பதில் நீதவான் பரிசோதனையை மேற்கொண்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
