அங்கவீன படை உறுப்பினரை தாக்கிய பின், நாட்டில் இருந்து வெளியேறிய ரக்பி வீரர்!
அங்கவீன படை உறுப்பினர் மீது தாக்குதல்
கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலின் போது சமூக ஊடகங்களில் பரவிய அங்கவீனமுற்ற இராணுவ உறுப்பினர் ஒருவரை தாக்கியவர், சஜித் சாரங்க என அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில், சஜித் சாரங்க நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இதனையடுத்து பயணத்தடை விதிக்க உத்தரவிடுமாறு குற்றப்புலனாய்வுத் துறையினர் சார்பில் மன்றில் முன்னிலையான சிரேஷ்ட பிரதி மன்றாடியார் நாயகம் திலான் ரத்நாயக்க கோரிக்கை விடுத்தார்.
இந்தநிலையில் ரக்பி வீரர் நாடு திரும்பினால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யும் நோக்கில் அவருக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்து நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்தார்.
இதேவேளை, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தற்போது நடைபெற்று வரும் காலிமுகத்திடல் தாக்குதல் தொடர்பான வழக்கின் 29ஆவது பிரதிவாதியாக சஜித் சாரங்கவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பெயரிட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணை ஜூன் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காலிமுகத்திடலில் 22ஆவது நாளாக தொடரும் போராட்டம் (Video)



