கிளிநொச்சியில் தேன் எடுப்பதற்காக சென்ற நபர் தவறி விழுந்து பலி
கிளிநொச்சி - குமாரசாமிபுரம் பகுதியில் தேன் எடுப்பதற்காக சென்ற நபர் தேன் எடுப்பதற்காக மரத்தில் ஏறிய போது மரத்திலிருந்து தவறி விழுந்த உயிரிழந்துள்ளார்.
தவறி விஐந்த நிலையில் உறவினர்களின் உதவியுடன் சிகிச்சைகளுக்காக தருமபுர வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பொழுது, ஏற்கனவே இறந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.
மரத்தில் ஏறியவர்
உயிரிழந்தவர், குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள்துரை என்ற துரை ராசா 51 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே ஆவார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அத்துடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர் இறந்தவரின் சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பாக தருமபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |