லண்டனில் கத்திக்குத்து! - முக்கிய வீதிகள் முடக்கம்
லண்டன் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனைக்கு வெளியே ஒருவர் குத்தப்பட்ட சம்பவத்தின் பின்னர் லண்டனின் பழைய வீதி பொலிஸாரால் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் மாலை 5.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பத்தை அடுத்து பழைய வீதி சுற்றுவட்ட பகுதிக்கு பொலிஸார் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நபர் ஒருவர் குத்தப்பட்ட நிலையில், காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும், அவரின் உயிராபத்து குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இதற்கிடையில், கிரேட் ஈஸ்டர்ன் வீதி மற்றும் பழைய வீதி சுற்றுவட்ட பகுதிக்கு மூடப்பட்ட பின்னர் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சமூக ஊடகங்களில், சாரதிகள் தாங்கள் "நரகத்தில்" அமர்ந்திருப்பதாகக் கூறியுள்ளனர், சிலர் "ஒரு மணி நேரத்திற்கும் மேலாக" நெரிசலான போக்குவரத்தில் சிக்கியுள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும், அந்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Islington
— London 999 Feed (@999London) May 5, 2021
BREAKING: A section of Old Street and City Road, EC1, is closed due to an ongoing Police incident.
Moorfields Eye Hospital have warned the public not to visit their A&E department which is now closed as a result.
🎥@ec1vOld pic.twitter.com/NVqow9nswr