யாழ்.தொல்புரத்தில் கத்திகுத்து தாக்குதலுக்கு உள்ளான ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
யாழ்ப்பாணம்-தொல்புரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கத்தி வெட்டு தாக்குதலுக்கு உள்ளான ஆணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(27.6.2026) இரவு இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் கடந்த 22.06.2026 அன்று ஒரு கத்தி வெட்டு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது வயிற்றில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபரை முன்பதாக வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்து மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை எதிர்வரும் (07.07.2026) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசியல்வாதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மறைத்துவைத்துள்ள கோடிக்கணக்கான பணம் - எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam