காட்டெருமை தாக்கி வயோதிபர் படுகாயம்(Video)
கந்தப்பளை -ஹைபொரஸ்ட் இலக்கம் மூன்று நகரில் காட்டெருமை தாக்கி வயோதிபரொருவர் நுவரெலியா படுகாயமடைந்த நிலையில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹைபொரஸ்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் பகல் பிங்கந்தலாவை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு ஹைபொரஸ் இலக்கம் மூன்று தோட்டத்தை சேர்ந்த 84 வயதான முனியன் என்பவரே காட்டெருமை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் அச்சம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பிங்கந்தலாவை பகுதியிலிருந்து காட்டெருமை ஒன்று நகருக்கு திடீரென வந்த நிலையில் அந்த காட்டொருமையை விரட்டியடிக்க நகரில் சிலர் முற்பட்டுள்ளனர்.
இதன்போது குறித்த வயோதிபர் காட்டெருமையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
குறிப்பாக கந்தப்பளை ஹைபொரஸ்ட் வனப்பகுதியில் காட்டெருமை, காட்டுபன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி பிரதான நகர் பகுதிகளுக்குள் புகுந்து விடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |