மட்டக்களப்பில் வயல் பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு- எருவில் கிராமத்தில் வயல் பகுதியிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலமானது நேற்றையதினம் (26) மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் எருவில் கிராமத்தை சேர்ந்த 44 வயதுடைய இரத்தினசிங்கம் உத்தமன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழப்பு
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்று அப்பகுதியில் அமைந்துள்ள அவரது வயலுக்குள் வேளாண்மையினை பார்ப்பதற்காக துவிச்சக்கரவண்டியில் சென்றுள்ளார்.

துவிச்சக்கர வண்டியை குளக்கட்டில் வைத்துவிட்டு வயலுக்குள் இறங்கி தனது வேளாண்மைச் செய்கையை பார்வையிட்டுள்ளார்.
அப்போது அவருக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக வயலுக்குள்ளேயே மரணம் அடைந்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்தனர்.
விசாரணை
குறித்த விடயம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் திடீர் மரணவிசாரணை அதிகாரி வி.ஆர்.மகேந்திரன், சடலத்தை பார்வையிட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.
மாரடைப்பு காரணமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டதையடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri