தென்னிலங்கையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன் - சகோதரி வீட்டுக்குள் நடந்த பயங்கரம்
தென்னிலங்கையில் நபர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மொரந்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம, வல்கம பிரதேசத்தைச் சேர்ந்த லசந்த புஷ்பகுமார என்ற 30 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டுக்குள் கடும் மோதல்
மொரந்துடுவ பகுதியிலுள்ள சகோதரியின் வீட்டிற்கு உயிரிழந்த நபர் சில நண்பர்களுடன் சென்று, சகோதரியின் கணவருடன் முரண்பட்டுள்ளார்.

கடுமையாக தாக்கப்பட்ட குறித்த நபர் கடும் காயங்களுக்குள்ளாகி கோணதுவ பகுதியிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மொரந்துடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டில் ஆயிரம் பிரச்சனை, ஆனால் ரொமான்ஸ் Moodல் கதிர்- ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரொமான்டிக் புரொமோ Cineulagam
Siragadikka Aasai: முத்துவின் சட்டையைப் பிடித்து அடித்த ரவி... அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட விரிசல் Manithan
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri