வாடகை அறையில் தங்கியிருந்த இளைஞன் நள்ளிரவில் படுகொலை
கம்பஹாவில் அறையில் தங்கியிருந்த இளைஞன் நேற்றிரவு கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
பியகம பொலிஸ் பிரிவின் கெமுனு மாவத்தை பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் முல்லேரியாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளைஞன் படுகொலை
கொலை செய்யப்பட்ட நபர் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இளைஞன் தங்கியிருந்த அறைக்கு முன்னால் அவரது முச்சக்கர வண்டி தீப்பிடித்து எரிவதைக் கண்டு குறித்த நபர் வெளியே வந்துள்ளார்.
இதன் போது முகமூடி அணிந்திருந்த இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொலையை செய்த சந்தேக நபர்கள் அல்லது கொலைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
மேலும் சந்தேக நபர்களைக் கைது செய்ய பியகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் முல்லேரியாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.