தொடருந்து மோதியதில் நபரொருவர் படுகாயம்
ஓட்டமாவடி(Oddamavadi) பகுதியில் தொடருந்தில் மோதியதில் நபர் ஒருவர் இன்று(22) காலை காயமடைந்துள்ளார்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தொடருந்து, ஓட்டமாவடி பகுதியால் செல்லும் போது குறித்த நபர் புகையிரத பாதையை கடக்க முற்பட்ட நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
வாழைச்சேனை(Valaichchenai) பிரதேசத்தைச் சேர்ந்த மௌலவி ஒருவரே இந்த விபத்தில் காயமடைந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபர் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        