கொழும்பில் தொடர்மாடி குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை
கொழும்பு, மாளிகாவத்தை லக்சித செவன அடுக்குமாடி குடியிருப்பின் 11வது மாடியில் உள்ள லிப்ட்டின் ஓட்டையிலிருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் கொழும்பு 10, மாளிகாவத்தை, லக்சித செவன அடுக்குமாடி குடியிருப்பில் தற்காலிக வதிவிடம் பெற்று, கூலி வேலை செய்து வந்த 36 வயதானவரே உயிரிழந்துள்ளார்.
நண்பரைச் சந்தித்துள்ளார்
இறந்தவர் தற்காலிகமாகத் தங்கியிருந்த உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த போது, அடுக்குமாடி குடியிருப்பின் தரைத் தளத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த நண்பரைச் சந்தித்துள்ளார்.
அவரது நண்டரிடம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுகளை கொண்டு வர பயன்படுத்தப்படும் லிப்ட் பழுதடைந்துள்ளதாக இறந்தவர் கூறியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இறந்தவர் லிப்ட்டின் தொழில்நுட்பக் கோளாறை சரிபார்த்துள்ளார். இதன் போது லிப்ட் 11வது மாடியில் நின்றுவிட்டதாக நினைத்து கதவுகளை திறந்துள்ளார்.
எனினும் லிப்ட் இடையிலேயே நின்றிருந்தமையினால் அவர் அதன் ஓட்டையில் கீழே விழுந்துள்ளார்.
படுகாயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

ஒரே ஒரு மாணவன் மற்றும் ஒரே ஒரு ஆசிரியருக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாநிலத்தில்? News Lankasri
