வவுனியாவில் ஆலய கேணியை சுத்தம் செய்த குடும்பஸ்தர் மின்சாரம் தாக்கி பரிதாப மரணம்
வவுனியாவில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 45 வயதுடைய குடும்பஸ்த்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின்கசிவு
குறித்த சம்பவம் வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் நேற்று(3) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
குறித்த ஆலயத்தில் அமைந்துள்ள கேணியை துப்புரவாக்கும் பணியில் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, நீர் இறைக்கும் இயந்திரத்தில் இருந்து மின்கசிவு ஏற்பட்டமையால் குடும்பஸ்த்தர் படுகாயமடைந்துள்ளார்.
அவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam