மீன்பிடிக்கச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி மரணம்
அனுராதபுரம், நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அந்தர குளம் பகுதியில், நீர் நிரம்பிய குழியொன்றில் மீன்பிடிக்கச் சென்ற முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அந்தர குளம் பகுதியில் உள்ள கற்குவியல்களுக்கு நடுவில் நீர் நிரம்பியிருந்த பகுதியில், நேற்று(19.07.2026) மேற்படி நபர் மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.
சி.டி.விக்ரமரத்ன மரணிப்பதற்கு முன் சந்தித்த பிரபல அரசியல்வாதி! மூன்று மணித்தியாலம் பேசிய விடயம் என்ன..!
பொலிஸார் விசாரணை
நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரைத் தேடிச் சென்றுள்ளனர்.

இதன்போது, அவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டு உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த நொச்சியாகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலம் மீட்கப்பட்டபோது, அது மீன்பிடி வலையில் சிக்கிய நிலையில் இருந்தது என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அந்தர குளம் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபராவார். இந்தச் சம்பவம் குறித்து நொச்சியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.