குரங்குகளுக்கு வைத்த பொறியில் சிக்கி பலியான விவசாயி
ஊவா பரணகம அம்பகஸ்தோவ பிரதேசத்தில் குரங்குகளுக்கு வைத்த மின் பொறியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
67 வயதான ஜீ.எஸ்.எம். செனவிரத்ன என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கிழங்கு விவசாயியான இவர், கிழங்கு பயிர்களை குரங்குகளிடம் இருந்து பாதுகாக்க மின்சார பொறியை வைத்துள்ளார்.
தனது காணிக்கு அருகில் செல்லும் அதிசக்தி வாய்ந்த மின் இணைப்பு கம்பியில் இணைப்பை ஏற்படுத்தி குறித்த நபர் சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் பயிர்களை குரங்குகளிடம் இருந்து பாதுகாக்க வைத்த மின்சார பொறியில் அந்த நபரே சிக்கி உயிரிழந்துள்ளார்.
காணிக்கு அருகில் அவரது சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் குறித்து ஊவா பரணகம, அம்பகஸ்தோவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண் வருகின்றனர்.
Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan
தேர்தல் பின்னடைவு ஒரு பக்கம்... விற்பனை இல்லாமல் Cybertruck உற்பத்தியை நிறுத்தும் எலான் மஸ்க் News Lankasri