யாழில் ஊசி மூலமாக உடலில் போதைப்பொருளை செலுத்தி வந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
யாழில்(Jaffna) 5 மாதங்களாக ஊசி மூலமாக போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம்(28) உயிரிழந்துள்ளார்.
புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் நிதுசன்(வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக சிகிச்சை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் 5 மாதங்களாக ஊசி மூலமாக போதைவஸ்தை உடலினுள் செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 27ஆம் திகதி இவருக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டதால் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நேற்றையதினம் (28) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 19 மணி நேரம் முன்

ஈஸ்வரியை சீக்ரெட்டாக வந்து சந்தித்த நபர், பிரச்சனையில் சிக்கப்போகும் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri
