யாழில் தகரங்கள் மேலே விழுந்ததால் மயக்கமுற்ற நபர் உயிரிழப்பு!
யாழில் தகரங்கள் மேலே விழுந்ததால் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் இன்றையதினம் (17.10.2025) உயிரிழந்துள்ளார்.
மயிலிட்டி வடக்கு, காங்கேசன்துறை பகுதியைச் சேர்ந்த ஹரிகரராஜா டலஸ்குமார் (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் யாழில் உள்ள ஒரு வர்த்தக நிலையமொன்றில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் 14ஆம் திகதி கடையில் அடுக்கப்பட்டிருந்த தகரங்களை நகர்த்துவதற்கு முயற்சித்துள்ளார்.
மரண விசாரணைகள்
இதன்போது தகரங்கள் அவர் மீது விழுந்ததில் அவர் மயக்கமுற்றார். பின்னர் சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



