தண்டவாளத்தில் நின்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞருக்கு நேர்ந்த கதி
மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி பிரதேசத்தில் தொடருந்து தண்டவாளத்தில் நின்று கைத்தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (10.08.2025) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இளைஞர் உயிரிழப்பு
சம்பவத்தில் மட்டக்களப்பு, ஊறணியைச் சேர்ந்த 23 வயதுடைய நாகேந்திரன் கரிகரராஜ் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு தண்டவாளத்தில் நின்று கொண்டு மனைவியுடன் தொலைபேசியில் பேசி சண்டைபிடித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விசாரணை முன்னெடுப்பு
இதனையடுத்து சடலத்தை மீட்டு ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு தொடருந்து கொழும்பு நோக்கி பிரயாணித்துள்ளது.

சம்பவம் தொடர்பாக ஏறாவூர் மற்றும் கொக்குவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 11 மணி நேரம் முன்
குக் வித் கோமாளி 7வது சீசனில் அய்யனார் துணை சீரியல் ஜோடி... வேறு யாரெல்லாம் பாருங்க, வீடியோ Cineulagam
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam