முள்ளியவளையில் வாள்வெட்டாக மாறிய வாய்த்தர்க்கம்: ஒருவர் பலி
முல்லைத்தீவு - முள்ளியவளை தெற்கு பகுதியில் இளைஞர் குழுக்களுக்கிடையில் இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வாள்வெட்டு சம்பவமாக மாறியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு
சம்பவத்தில் முள்ளியவளை தெற்கினை சேர்ந்த குடும்பஸ்தரான பெருமாள் சதீஸ்வரன் (32 வயது) என்பவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு கிராமத்தவர்கள் தெரியப்படுத்தியும் பொலிஸார் ஸ்தலத்திற்கு வரவில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலம்
இதேவேளை உயிரிழந்தவரின் சடலம் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும், சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.