கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆயுதத்துடன் சிக்கிய நபர்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைத்துப்பாக்கியை தன்வசம் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்கவில் இருந்து பஹ்ரைனுக்கு விமானமூலம் செல்லவதற்காக சென்ற நபரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பளையைச் சோ்ந்த 49 வயதான குறித்த நபரின் பயணபொதியை விமான நிலைய சோதனைச் சாவடியில் விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சோதனைச் செய்தபோது மறைத்துவைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி ஒன்றை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த நபரை கைது செய்ததுடன் கைத்துப்பாக்கியை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
