கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு: வவுனியாவில் சம்பவம்(Photo)
வேப்பங்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள வாகனங்கள் திருத்தம் மேற்கொள்ளும் நிலைய வளாக கிணற்றிலிருந்து இன்று (22) காலை ஆண் ஒருவரின் சடலத்தினை நெளுக்குளம் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
சம்பவம்
வவுனியா நகர் பகுதியில் இயங்கும் தனியார் வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான 50 வயதுடைய அழகர்சாமி விஜயகுமார் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று(21) மாலை வீட்டிலிருந்து வெளியேறிய நிலையிலேயே இன்று காலை
கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலையா அல்லது தற்கொலையா
இந்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் தடவியல் பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
