மனைவியை வீதியில் வைத்து தாக்கிய நபர்..! கடவத்தையில் குழப்பம்
கடவத்தை பகுதியில் நபரொருவர் தனது மனைவியை வீதியில் வைத்து அடித்து துன்புறுத்தும் வகையிலான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
இந்த சம்பவம் நேற்றையதினம்(18.07.2025) இடம்பெற்றுள்ளது.
இதனை அவதானித்த சிலர் தாக்குதலை தடுக்கச் சென்றவேளை, அங்கு குழப்பகரமான நிலை ஏற்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான பெண் சரிந்து கீழே விழுந்த நிலையில், அங்கு கூடியிருந்தவர்களிடம், தன்னை தாக்கியது கணவரென்றும், அவர் தனது வயிற்றில் கடுமையாக தாக்கியதால் தான் சரிந்து விழுந்ததாகவும், வீதி முழுவதும் தன்னை அடித்து துன்புறுத்தி இழுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண்
சம்பவ இடத்தில் அதிகளவான பொதுமக்கள் ஒன்று கூடிய பிறகு, குறித்த நபர், இது தனது மனைவி எனவும், தாம் பொலன்னறுவையில் வசிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, தனது மனைவியின் முகத்தில் தண்ணீர் தெளித்து, அரவணைத்து அருகில் அமர்த்திக் கொண்டுள்ளார். எனினும், அருகில் இருந்தவர்கள் குறித்த நபரை கடுமையாக வசைபாடினர்.
அதன் பின்னர், அங்கு வந்த பொலிஸார் குறித்த நபரை கடுமையாக எச்சரித்ததுடன், அவசர அம்பியூலன்ஸ் சேவைக்கு அறிவித்து பெண்ணை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், தனது மனைவியை தாக்கிய நபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லவும் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri
