நாட்டில் பதிவாகிய சட்டவிரோத சம்பவங்கள் (Photos)
இலங்கையின் பல பகுதிகளில் சில குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. அதன்படி நாட்டின் பல இடங்களில் தொடர்ச்சியாக திருட்டுச் சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வன்னிவிளாங்குளம் பகுதியில் சட்டவிரோத நாட்டு துப்பாக்கியினை தம்வசம் வைத்திருந்த ஒருவரை மாங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் நேற்று இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வன்னி விளாங்குளம் பகுதியினை சேர்ந்த 32 அகவையுடைய குடும்பஸ்தரே, சட்டவிரோத நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது நாட்டுத் துப்பாக்கியினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறை சுப்பர்மடத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளில் 20 துவிச்சக்கர வண்டிகளைத் திருடி விற்பனை செய்துள்ளதாக சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அவற்றில் 10 துவிச்சக்கர வண்டிகளே கைப்பற்றப்பட்டுள்ளன. ஏனையவை தேடப்பட்டு வருகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri
