புத்தளத்தில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது (Photos)
புத்தளத்தில் கேரளா கஞ்சா பொதியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் சமகிமாவத்த பகுதியில் நேற்று (02.02.2023) பொலிஸ் போதை தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய வீடொன்றை முற்றுகையிட்டு சோதனைகளை மேற்கொண்டபோது கேரளா கஞ்சாப் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
மேலும், கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா 3 கிலோகிராம் 800 கிராம் எடையுடையது எனவும் இதன் பெறுமதி சுமார் 7 இலட்சம் ரூபா என மதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் போதைத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புத்தளம் சமகிமாவத்தைப் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சாப்பொதிகள் புத்தளம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் போதைத் தடுப்புப் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவுமு் தெரிவித்துள்ளனர்.





புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
