கிண்ணியாவில் ஹெரோயினுடன் ஒருவர் கைது
கிண்ணியா கட்டையாறு பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்றிரவு (26) இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர் கிண்ணியா கட்டையாறு பகுதியைச் சேர்ந்த முகம்மது சமூன் முகம்மது றிபாய் (58வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை மதுபான ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து அவரை சோதனையிட்டபோது அவரிடமிருந்து ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் ஹெரோயினை விற்பனை செய்யும் நோக்கில் இதனை கொண்டு வரும்போதே அல் அக்ஷா கல்லூரிக்கு அருகாமையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த சந்தேக நபரை திருகோணமலை போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவு கைது செய்து கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
