வெள்ளவத்தையில் பெருந்தொகை போலி டொலர்களுடன் சிக்கிய தமிழ் குடும்பஸ்தர்
கொழும்பு, வெள்ளவத்தையில் போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபரிடமிருந்து 453 போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் போலி நாணயம் தொடர்பான பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, வெள்ளவத்தை பகுதியில் தற்காலிக தங்குமிடங்களை வழங்கும் இடமொன்றை சுற்றிவளைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.
போலி டொலர்
இதன்போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு இந்த போலி டொலர் எவ்வாறு கிடைத்தன, மற்றும் இந்த நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 43 வயதுடைய சந்தேகநபர் தலவாக்கலை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam