மட்டு நகரில் கஞ்சாவுடன் ஒருவர் கைது (Video)
மட்டக்களப்பில் தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் கஞ்சா விற்பனை செய்துவரும் வீடு ஒன்றை இன்று (02.11.2022) பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
கஞ்சா வியாபாரம்
இந்த முற்றுகையின் போது கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட கஞ்சா வியாபாரியை 78 ஆயிரம் மில்லிக்கிராம்
கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய சுற்றுச் சூழல் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கஜநாயக்கா தலைமையில் பொலிஸ் அதிகாரி ரி.கிருபா உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் கருவப்பங்கேணியிலுள்ள வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தல்
இதன்போது கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 21 வயதுடைய கஞ்சா வியாபாரியை 78 ஆயிரம் மில்லிக்கிராம் கஞ்சாவுடன் கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 21 மணி நேரம் முன்

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
