வவுனியாவில் குத்தகை வாகனங்களை பிரித்து விற்பனை செய்தவர் கைது
டிப்பர் ரக வாகனங்களை நிதி நிறுவனங்களில் இருந்து குத்தகை அடிப்படையில் பெற்று அவற்றின் பகுதிகளை பிரித்து விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வைத்து ஒருவரை கைது செய்திருந்தனர்.
நீதிமன்றில் முன்னிலை
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தொடர்ச்சியாக பல டிப்பர் வாகனங்களை இவ்வாறு கொள்வனவு செய்து அதன் பகுதிகளை பிரித்து விற்பனை செய்துவந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து வாகனத்தின் இயந்திர அடிச்சட்டங்கள் ஒரு தொகை கைப்பற்றப்பட்டதுடன் அவர் நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டிருந்தார்.
குறித்த கைது நடவடிக்கை மாவட்ட குற்றவிசாரணை பிரிவின் உப பரிசோதகர் ராஜகுரு தலைமையில் சாஜன்களான ரூபசிங்க, அசங்க, மற்றும் ரெயினோல், றொசான், மிதுசன், சுபுண் ஆகியோரை உள்ளடக்கிய பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.
ஜனாதிபதி செயலகம் முன் அதிரடியாக களமிறங்கிய பொலிஸ் பேருந்துகள்! பிக்குகளின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி