வவுனியாவில் வெளிநாடு அனுப்புவதாக கூறி மோசடி செய்த நபர் கைது
வவுனியா- நெடுங்கேணி பகுதியில் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பணமோசடி செய்த சந்தேகநபர் ஒருவரை நெடுங்கேணி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் வெளிநாடுகளுக்கு வேளையாட்களை அனுப்புவதாக கூறி நெடுங்கேணி பகுதியை சேர்ந்த சிலரிடம் பணத்தினை பெற்றுள்ளார்.
மீள வழங்கப்படாமை

எனினும் நீண்ட நாட்களாகியும் வெளிநாட்டிற்கு அனுப்பாமையினால் பணத்தை வழங்கிய நபர்கள் அதனை மீளத்தருமாறு கோரியிருந்தும் சந்தேகநபரினால் பணம் மீள வழங்கப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்டவர்களால் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்
உத்தரவிட்டுள்ளார்.
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan