அம்பாறையில் சட்டவிரோதமாக துப்பாக்கி ரவைகளை வைத்திருந்த நபர் கைது
அம்பாறை (Ampara) - திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதியில் சட்டவிரோதமாக 8 துப்பாக்கி ரவைகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி ரவைகளை வைத்து மிருகவேட்டையாடி வரும் 54 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து, பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விநாயகபுரம் 4ஆம் பிரிவிலுள்ள காயத்திரி கிராமம் பகுதியிலுள்ள கைது செய்யப்பட்ட நபரின் வீட்டை முற்றுகையிட்டு சோதனையிட்டுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
இதன்போது, பயன்படுத்த கூடிய நிலையில் உள்ள சொட்கண் ரக துப்பாக்கியின் 5 ரவைகளும் வெறுமையான 3 ரவைகளும் உட்பட 8 ரவைகளை மீட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இதில் கைது செய்யப்பட்ட நபர் 54 வயதுடையவர் எனவும் சட்டவிரோதமாக உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளை பாவித்து காட்டுமிருகங்களை வேட்டையாடி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
இதற்கமைய, குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்.. வைல்டு கார்டு என்ட்ரி நடிகர் அமித் பார்கவ் பற்றி இது தெரியுமா Cineulagam